தக்காளி அடைத் தோசை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தக்காளி – 4 எண்ணம் (பழுத்தது)
2. புழுங்கல் அரிசி – 300 கிராம்
3. இஞ்சி – 1 துண்டு
4. மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
5. மிளகு – 2 மேசைக்கரண்டி
6. பூண்டு – 4 பல்
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துத் தண்ணீர் வடித்து இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து அரைக்கவும்.
2. சிறிது அரைபட்டதும் தக்காளியை நறுக்கிப் போட்டு அரைக்கவும்.
3. இந்த மாவில் உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும், அடைக்கு ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.