உருளைக்கிழங்கு தோசை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 2 எண்ணம்
2. மைதா - 2 மேசைக்கரண்டி
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. மல்லித்தழை - சிறிது
5. எண்ணெய் - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் உருளைக்கிழங்கைக் கழுவி, தோலுரித்துத் துருவிக் கொள்ள வேண்டும்.
2. உருளைக்கிழங்கு துருவலுடன் மைதா மாவு, உப்பு சேர்த்துத் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு போல் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3. அதில் பச்சை மிளகாய் மற்றும் மல்லித்தழையைப் நன்கு பொடியாக நறுக்கிக் கலந்து கொள்ள வேண்டும்.
4. தோசைக்கல்லை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், எண்ணெய் தடவி அதில் கலந்து வைத்திருக்கும் மாவைத் தோசை போல் வார்த்து வேக விட வேண்டும்.
5. ஒரு புறம் வெந்ததும், மறுபுறம் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.