சிலோன் சிக்கன் பிரைய்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி- 1 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டவும்.)
2. இஞ்சி- சிறியது
3. வெங்காயம்- 250 கிராம்
4. நல்லெண்ணெய்- 100 மி.லி
5. மிளகு- 1 தேக்கரண்டி
6. வற்றல்- 8 எண்ணம்
7. சீரகம்- 1 மேஜைக் கரண்டி
8. மல்லி- 2 மேஜைக் கரண்டி
9. தக்காளி - 4 எண்ணம்
10. முட்டை- 4 எண்ணம்
11. பூண்டு- 2 பல்
12. உப்பு, மஞ்சள்- தேவையான அளவு
செய்முறை:
1.மசாலாப் பொருட்களை அரைத்துக் கோழிக்கறித் துண்டுகளில் போட்டு உப்பு, மஞ்சள்,தக்காளி போட்டு வேக வைக்கவும்.
2. வெந்தபின்பு அதிலுள்ள நீர் இல்லாமல் வற்ற வைக்கவும்.
3. பின் ஆற வைத்துக் கோழிக்கறித் துண்டுகளிலுள்ள எலும்புகளை நீக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நறுக்கி வைத்த வெங்காயம் போட்டு பாதியாக வதக்கவும்.
5. முட்டைகளை உப்பு போட்டு அடித்துத் தனியாக பொடிமாஸ் செய்து கோழி வறுவலுடன் சேர்த்து மேலும் சில நிமிடம் வதக்கி எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.