மிளகுக் கோழி வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 500 கிராம்
2. வெங்காயம் - 150 கிராம்
3. இஞ்சி - 25 கிராம்
4. பூண்டு - 20 பல்
5. மிளகு - 2 தேக்கரண்டி
6. சோம்பு -1 தேக்கரண்டி
7. கசகசா - 1 தேக்கரண்டி
8. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
9. புதினா - சிறிது
10. மல்லித்தழை - சிறிது
11. கறிவேப்பிலை - சிறிது
12. தயிர் - 2 தேக்கரண்டி
13. எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி
14. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
15. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும்.
3. மிளகு, சீரகம், சோம்பு, கசகசாவை வறுத்து அரைக்கவும்.
4. பச்சை மிளகாய், புதினா, மல்லி, கறிவேப்பிலையையும் தனியாக அரைக்கவும்.
5. கழுவிய கோழிக்கறியை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்து வைத்த அனைத்தையும் சேர்க்கவும்.
6. பின்னர் அதில் தயிர், எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து குளிர்பதனப் பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும்.
7. அதன் பிறகு வாணலியில், 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
8. வெங்காயம் வதங்கியதும், குளிர்பதனப் பெட்டியில் இருக்கும் கோழி மசாலாவைப் போட்டு வதக்கவும்.
9. தீயை மிதமாக வைக்கவும். கோழிக்கறி 10 நிமிடத்திற்குள் வெந்துவிடும். நல்ல வறுவல் வேண்டுமெனில் கூடுதலாக 5 முதல் 10 நிமிடம் அடுப்பில் வைத்திருக்கலாம்.
10. பின்னர் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் புதினா, மல்லித் தழையை மேலாகப் போடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.