கோழிக்கறி பக்கோடா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. எலும்பில்லாத கோழிக்கறி – 250 கிராம்
2. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
3. சாட் மசாலா – 1/4 கரண்டி
4. சீரகத் தூள் – 1/4 கரண்டி
5. கரம்மசாலா தூள் – 1/4 கரண்டி
6. கடலை மாவு – 5 கரண்டி
7. கார்ன் ப்ளவர் மாவு – 5 கரண்டி
8. மஞ்சள் தூள் – சிறிதளவு
9. இஞ்சிப் பூண்டு விழுது – 1/2 கரண்டி
10. மிளகாய்த் தூள் – 1 1/2 கரண்டி
11. சோடா உப்பு – சிறிது
12. கேசரி பவுடர் – சிறிது
13. ஓமம் – சிறிது
14. உப்பு – தேவையான அளவு
15. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. எலும்பில்லாத கோழிக்கறியை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ள வேண்டும். பின்னர் அதை மிக்சியில் போட்டு கொத்துகறி போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. அரைத்து எடுத்த கோழிக்கறியுடன் இஞ்சிப் பூண்டு விழுது, சிறிதாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகத்தூள், கரம் மசாலாத் தூள், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
3. கடலை மாவு, கார்ன் ப்ளவர் மாவு, மிளகாய்த் தூள், ஓமம், சோடா உப்பு, உப்பு, கேசரி பவுடர் ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. தனியாக பிசைந்து ஊற வைத்துள்ள சிக்கனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
5. கோழிக்கறி உருண்டையை மாவில் மேலாக நனைத்து அந்த மாவை சிக்கன் உருண்டை மேல் தடவ வேண்டும்.
6. அந்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.