கோழிக்கறிப் பொறியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. எலும்பில்லாத கோழிக்கறி - 300 கிராம்
2. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
3. பூண்டு - 6 பற்கள்
4. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
5. தக்காளி - 1 எண்ணம்
6. தயிர் - 1 மேசைக்கரண்டி
7. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
8. கருவேப்பிலை - தேவையான அளவு
9. மல்லித்தழை - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கோழிக்கறியைச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. மிளகாய் வற்றல், தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றுடன் தயிர் சேர்த்து மிக்ஸியில் விழுது போல் அரைத்து எடுக்கவும்.
3. சுத்தம் செய்து வைத்துள்ளச் கோழிக்கறியுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாகப் பிசறி வைக்கவும்.
4. பிசறி வைத்த கோழிக்கறியைக் குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
5. கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கருவேப்பிலை போட்டு, அத்துடன் பிசறி வைத்த கோழிக்கறியைச் சேர்த்து வதக்கவும்.
6. கோழிக்கறியுடன் தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது. கோழிக்கறியிலிருந்து வெளியேறும் தண்ணீரை நன்கு வற்ற வைக்கவும்.
7. அடிக்கடி கோழிக்கறியை கரண்டி மூலம் புரட்டி விடவும். கோழிக்கறி முழுவதும் மசாலா சேர்ந்து வரும் வரை புரட்டி விடவும்.
8. கடைசியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.