மிளகுக் கோழி வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முழுக் கோழி -12 துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்
2. இஞ்சி- 25 கிராம்
3. பூண்டு- 35 கிராம்
4. வெங்காயம்- 300 கிராம்
5. நல்லெண்ணெய்- 60 மி.லி
6. மிளகுத்தூள்- 10 கிராம்
7. வற்றல்- 8 எண்ணம்
8. சீரகம்- 2 மேஜைக் கரண்டி
9. மல்லி- 2 மேஜைக் கரண்டி
10. தக்காளி - 4 எண்ணம்
11. பச்சை மிளகாய்- 6 எண்ணம்
12. தயிர் - 500 கிராம்
13. வினிகர் - 20 மி.லி
14. ஏலக்காய் - சிறிது
15. முந்திரிப் பருப்பு - சிறிது
16. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1.100 கிராம் தயிரில் உப்பு, மிளகுத்தூள் மற்றும் அரைத்த இஞ்சி, பூண்டு கலந்த கலவையில் கோழிக்கறி துண்டுகளை ஊற வைக்கவும்.
2. வினிகரில் வெங்காயம், முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்து வேக வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் இஞ்சி, பூண்டு போட்டு பாதியாக வதக்கவும்.
4. அடுத்து ஊற வைத்த கறியைப் போட்டு நன்றாகக் கிளறவும்.
5. பிறகுக் கறியை எடுத்துத் தனியாக வைக்கவும். அடுத்து வேக வைத்த வெங்காயம் சீரகம், மல்லித்தூள், ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறவும்.
6. இப்போது மசாலாவில் ஊறிய கறியை அதனுடன் சேர்த்து வேகவிடவும்.
7. கறி வெந்ததும், மிளகுப் பொடி தூவி இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.