ஆந்திரா கோழிக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 1 கிலோ
2. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
5. இஞ்சிப் பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
6. தயிர் - 100 மி.லி
7. தக்காளி - 2 எண்ணம்
8. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
9. மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
11. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
12. கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
13. பால் - 100 மி.லி.
14. உப்பு - தேவையான அளவு
15. கறிவேப்பிலை - சிறிது
16. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. கனமான பாத்திரத்தில் எண்ணெய்யைச் சூடாக்கி வெங்காயத்தை வதக்கவும்.
2. வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சிப் பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கித் தக்காளி சேர்க்கவும்.
3. பிறகு, கடைந்த தயிர் சேர்த்தபடி கிளறவும்.
4. ஐந்து நிமிடம் வரை விடாமல் கிளறிவிட்டு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
5. அத்துடன் கோழிக்கறித் துண்டுகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
6. கோழியுடன் அனைத்து மசாலாக்களும் கலந்து பொன்னிறமானதும் சிறிது சுடுநீர் ஊற்றவும்.
7. நீர் கொதித்ததும் தட்டை மூடி மிதமான நெருப்பில் கோழிக்கறியை நன்றாக வேக விடவும்.
8. பின்னர் கரம் மசாலாத் தூள் தூவிக் கலந்து கொதிக்க விடவும்.
9. கடைசியாக பால் ஊற்றிக் கலந்து சிறிது நேரத்தில் இறக்கவும்.
10. குழம்பில் கறிவேப்பிலை, மல்லித்தழை தூவிக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.