கோழிக்கறி குருமா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 1/2 கிலோ
2. பெரிய வெங்காயம் - 3 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
4. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
5. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
6. மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
7. மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
8. தேங்காய்ப் பால் - 2 கப்
9. கறிவேப்பிலை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. கோழியைப் பெரிய துண்டுகளாக வெட்டிச் சுத்தம் செய்யவும்.
2. முந்திரிப்பருப்பை பசை போல் அரைத்து வைக்கவும்.
3. வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கறிவேப்பிலை போடவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
5. வெங்காயம் வதங்கிய பின் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. அத்துடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும்.
7. கோழிக்கறி நன்கு வதங்கிய பின்னர் மிளகுத் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
8. கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும், தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு வேக விடவும்.
9. கோழிக்கறி முழுவதும் வெந்த பின் அரைத்த முந்திரிப்பருப்பு விழுதைச் சேர்த்து கலக்கி இறக்கவும்.
10. அதன் மீது வறுத்த முந்திரிப் பருப்பைத் தூவிச் சூடாக பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.