கோழிக்கறி பக்கோடா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறித் துண்டுகள் - 1 கிலோ
2. கடலை மாவு - 1/4 கிலோ
3. கான்ப்ளவர் மாவு- 2 மேசைக்கரண்டி
4. அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி
5. இஞ்சிப்பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
6. சின்ன வெங்காயம் - 100 கிராம்
7. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
9. மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
10. மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
11. சீரகத்தூள் - 1/2 மேசைக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. கோழிக்கறியைச் சுத்தம் செய்து மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், இஞ்சிப்பூண்டு விழுது, மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கிளறிக் குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் அரைத்த வெங்காய விழுது, கடலை மாவு, அரிசிமாவு, கான்ப்ஃளவர்மாவு, இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கரைத்து வைத்திருக்கும் மாவில், பிசறி வைத்திருக்கும் கோழிக்கறியை மேலாக மூழ்க வைத்துப் போடவும்.
5. நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.