செட்டிநாடு நாட்டுக்கோழிக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நாட்டுக் கோழிக்கறி - 1 கிலோ
2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. சோம்பு - 1 மேசைக்கரண்டி
5. சீரகம் - 1 மேசைக்கரண்டி
6. மஞ்சள்தூள் - 2 மேசைக்கரண்டி
7. பூண்டு - 8 பல்
8. இஞ்சி - சிறுதுண்டு
9. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
10. மல்லி - 2 மேசைக்கரண்டி
11. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
12. கசகசா - 1 மேசைக்கரண்டி
13. பட்டை - 1 சிறு துண்டு
14. கிராம்பு - 4 எண்ணம்
15. பிரிஞ்சி இலை - 1 எண்ணம்
16. அன்னாசிப் பூ - 1 எண்ணம்
17. எண்ணை - தேவையான அளவு
18. கறிவேப்பிலை - சிறிது
19. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கோழிக்கறியை சிறிய துண்டங்களாக நறுக்கி 1மேசைக்கரண்டி மஞ்சள் பொடி சேர்த்துப் பிசறி வைக்கவும்.
2. சீரகம், சோம்பு, மீதமுள்ள மஞ்சள் பொடி, இஞ்சி, பூண்டு சேர்த்துத் தனியாக விழுதாக அரைக்கவும்.
3. மிளகாய் வற்றல், மல்லியைத் தனியாக விழுதாக அரைக்கவும்.
4. தேங்காய்த் துருவல், கசகசா தனியாக விழுதாக அரைக்கவும்.
5. வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
6. கோழிக்கறியை நன்றாக நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீர் ஊற்றிக் கழுவவும்.
7. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ போட்டுத் தாளிக்கவும்.
8. தாளிசத்துடன் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டுச் சிவக்க வறுக்கவும்.
9. அதன் பிறகு கோழிக்கறியைப் போட்டுச் சில நிமிடம் வதக்கிப் பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
10. சில நிமிடம் வதக்கிய பின் சிறிது தண்ணீர், மஞ்சள், சோம்பு விழுது, உப்பு சேர்த்துப் பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
11. அதனுடன் மிளகாய், மல்லி விழுது சேர்த்துப் பத்து நிமிடம் வரை கொதிக்க விடவும்.
12. அதன் பின் தேங்காய் விழுது சேர்த்துப் பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.