உருளைக் கிழங்கு சிக்கன்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் - 500 கிராம்
2. உருளைக் கிழங்கு - 250 கிராம்
3. பெரிய வெங்காயம் - 200 கிராம்
4. இஞ்சி - 24 கிராம்
5. பூண்டு -4 பல்
6. தயிர் -100 மி.லி
7. மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி
8. நல்லெண்ணெய்- 50 மி.லி
9. மிளகாய்த்தூள் -சிறிது
10. மசாலா பொடி -தேவையான அளவு
(மசாலா பொடி தயாரிக்க: மிளகு -4 தேக்கரண்டி, தனியா -4 தேக்கரண்டி, சீரகம் -3 தேக்கரண்டி, பட்டை 10 கிராம் , ஏலக்காய்-2 எண்ணம், கிராம்பு -4 எண்ணம் வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு தேவையான பொழுது உபயோகிக்கலாம்)
செய்முறை:
1.சிக்கனை சிறு, சிறு துண்டுகளாக்கி வெட்டிக் கொள்ளவும்.
2. இஞ்சி பூண்டு சேர்த்து விழுது போல் அரைக்கவும்.
3. இந்த விழுதுடன் சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் வைத்திருக்கவும்.
4. இத்துடன் மஞ்சள்தூள், தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்நிறமாக வறுக்கவும்.
6. இத்துடன் சிக்கன் கலவையைச் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து வேக வைக்கவும். சிக்கன் அரை வேக்காட்டில் இருக்கும் போது நறுக்கிய உருளைக் கிழங்கு, மசாலா பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.