சில்லி சிக்கன்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் (எலும்பில்லாதது) - 500 கிராம்
2. பெரிய வெங்காயம் - 100 கிராம்
3. குடை மிளகாய் - 2 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
5. தக்காளி - 100 கிராம்
6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
7. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
8. வினிகர் - சிறிது
9. சோயா சாஸ் - சிறிது
10. நல்லெண்ணெய் - சிறிது
11. உப்பு - சிறிது.
செய்முறை:
1. சிக்கனைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சுத்தம் செய்து கொள்ளவும்.
2. அத்துடன் அரைத்த குடை மிளகாய், இஞ்சிப் பூண்டு விழுது, மஞ்சள் பொடி முதலியவற்றைப் போட்டுச் சிறிது வினிகரையும், சோயா சாஸையும் உப்பையும் சேர்த்துப் பிசிறி ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
3. ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிச் சூடேறியதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்றாகப் பொரித்துக் கொள்ளவும்.
4. இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெயை ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி முதலியவற்றைப் போட்டுச் சிறிது நேரம் வதக்கவும்.
5. சிக்கன் துண்டுகள் ஊறிய மசாலாவைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
6. பின்னர் அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனையும் போட்டு நன்கு கிளறி வேக விடவும்.
7. சிக்கன் வெந்த பிறகு இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.