தந்தூரி சிக்கன்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோழி - 2 எண்ணம்
2. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
3. எலுமிச்சை சாறு - 4 மேசைக்கரண்டி
4. வெண்ணெய் - சிறிது
5. தயிர் - 6 மேசைக்கரண்டி
6. ஃப்ரஷ் க்ரீம் - 100 கிராம்
7. இஞ்சிப் பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
8. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
9. கரம்மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
10. குங்குமப்பூ - 1 தேக்கரண்டி
11. சிகப்பு நிறப் பொடி (உணவுக்கானது) - 1 சிட்டிகை.
செய்முறை:
1. கோழியினைச் சுத்தம் செய்து, மார்பு, தொடை, கால் பகுதி என மூன்றையும் தனித்தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
2. வெட்டி எடுத்த கோழிக்கறியின் சதைப் பகுதியில் கத்தியால் மூன்று இடங்களில் ஆழமாகக் கீறி விடவும்.
3. மிளகாய்த்தூளுடன் உப்பினையும் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து விழுதாகக் கரைத்து கோழிக்கறித் துண்டுகளின் மீது ஒரே அளவாகப் பூசிச் சில நிமிடங்கள் ஊற விடவும்.
4. தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் க்ரீம், இஞ்சிப் பூண்டு விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், குங்குமப்பூ, சிகப்பு நிறப்பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கோழிக்கறித் துண்டுகள் மீது பூசவும்.
5. மசாலா கலவை பூசப்பட்ட கோழித் துண்டுகளைச் சுமார் ஐந்து மணி நேரங்களுக்கு நன்கு ஊறவிடவும்.
6. அதன் பிறகு அதனை எடுத்து கம்பியில் சொருகி அதிகமான சூட்டில் தந்தூரி அடுப்பில் 8 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும். (ஓவன் வைத்திருப்பவர்கள் 350 டிகிரி பாரன்ஹீட்டில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கலாம்)
7. அடுப்பில் வைத்து எடுத்த கறியில் மேலாக நீர் கோர்த்து நிற்கும். அந்த அதிகப்படியான நீரை வடித்து விட்டு, அதன் மீது வெண்ணெய் தடவி மேலும் சில நிமிடங்களுக்கு வேகவிட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.