இஞ்சிக் கோழிக்கறி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நாட்டுக் கோழிக்கறி – 500 கிராம்
2. மிளகாய்த்தூள் – 3 தேக்கரண்டி
3. நல்லெண்ணெய் – 100 மி.லி.
4. வினிகர் – 1 தேக்கரண்டி
5. இஞ்சி – 100 கிராம்
6. மஞ்சள்தூள் – 3 தேக்கரண்டி
7. கறிமசால் தூள் - 2 மேசைக்கரண்டி
7. கறிவேப்பிலை – சிறிது
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கோழிக்கறியைச் சுத்தமாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்தெடுக்கவும்.
2. இஞ்சியைச் சாறு எடுத்து வைக்கவும்.
3. கோழிக்கறியுடன் மஞ்சள்தூள், உப்பு, வினிகர், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகப் பிசறி வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பிசறிய கோழிக்கறி, கறிமசால் பொடி, இஞ்சிச்சாறு ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
5. பாதியளவு கறி வெந்ததும், மீதமுள்ள நல்லெண்ணெய்யைச் சேர்த்து பொன்னிறமாகும் வரைக் கிளறவும்.
6. கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.