நாட்டுக்கோழி மசாலா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நாட்டுக்கோழி - 1/4 கிலோ
2. பெரிய வெங்காயம் -1 எண்ணம்
3. பூண்டு - 6பல்
4. இஞ்சி - சின்ன துண்டு
5. தக்காளி - 1 எண்ணம்
6. புளி - சிறிது
7. மிளகாய்த் தூள் -1தேக்கரண்டி
8. சீரகத்தூள் - 1தேக்கரண்டி
9. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
10. மிளகுத்தூள் - 1தேக்கரண்டி
11. மல்லித்தூள் -2 தேக்கரண்டி
12. பச்சைமிளகாய் -2 எண்ணம்
13. கறிவேப்பிலை - சிறிது
14. மல்லித்தழை - சிறிது
15. எண்ணெய் - தேவையான அளவு
16. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
17. சீரகம் - 1/2 தேக்கரண்டி
18. பட்டை - சிறிய துண்டு
19. கிராம்பு - 2 எண்ணம்
20. ஏலக்காய் - 2 எண்ணம்.
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், தாளிக்கும் பொருட்களைத் தாளித்துக் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கிய பின், நாட்டுக்கோழிக்கறித் துண்டுகளைச் சேர்த்து, மஞ்சள்தூள் போட்டுக் கிளறவும்.
2. விழுதாக அரைத்த இஞ்சிப் பூண்டைச் சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்கிய பின் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் புரட்டிவிட்டு, புளிகரைத்த நீர் விட்டு, தேவைக்கேற்ப மேலும் சிறிது நீர் சேர்த்து கிளறிவிட்டு மூடி வேகவிடவும்.
3. கோழிக்கறி நன்கு வெந்ததும், இரண்டு மேசைக்கரண்டி அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கிளறிக் கெட்டியாக இறக்கவும்.
4. கடைசியாக மல்லிதழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.