கோழிப் பொறியல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோழி தொடைப்பகுதி – 4 எண்ணம்
2. பஜ்ஜி பவுடர் – சிறிது
3. மைதா மாவு – 50 கிராம்
4. கடலை மாவு – 50 கிராம்
5. சில்லி சிக்கன் பவுடர் – 50 கிராம்
6. எலுமிச்சை பழம் – 1 எண்ணம்
7. இஞ்சி,பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
8. எண்ணெய் – 500 மி.லி.
9. முட்டை – 1 எண்ணம்
10. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. கோழியின் தொடைப்பகுதியைச் சுத்தம் செய்து, அதில் கத்தியைக் கொண்டு சில இடங்களில் கீறல் போடவும்.
2. முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாகப் பிரித்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
4. இந்தக் கலவையில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, அத்துடன் நிறத்திற்காக சிறிது பஜ்ஜி பவுடரையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர நன்கு கலக்கவும்.
5. இந்தக் கலவையில் கோழியின் தொடைப்பகுதியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
7. எண்ணெய் நன்கு கொதித்தவுடன், குறைவான வெப்பத்தில், ஊற வைத்த கோழிக்கறியை போட்டு நன்கு வேக விடவும், பின்னர் அந்தக்கறியைத் திருப்பி விட்டும் வேகவைக்கவும்.
8. கறி பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.