வான்கோழிக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வான்கோழி – 1/2 கிலோ
2. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
3. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
4. உப்பு – தேவையான அளவு
மசாலா
5. வெங்காயம் – 2 எண்ணம்
6. தக்காளி – 3 எண்ணம்
7. இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
9. மல்லித்தூள் – 2 1/2 மேசைக்கரண்டி
10. சோம்புப்பொடி – 2 தேக்கரண்டி
11. கரம் மசாலாத்தூள் – 1 மேசைக்கரண்டி
12. எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
13. உப்பு – தேவையான அளவு
14. மல்லித்தழை – சிறிது.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு கனமான பாத்திரத்தில் வான்கோழிக் கறி, உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் தண்ணீர் ஊற்றிக் கறியை வேக வைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
3. நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அரைத்த வெங்காயம், தக்காளி விழுதைச் சேர்த்து, எண்ணெய் தனியாகப் பிரியும் வரை வதக்கவும்.
5. பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, உப்பு மற்றும் அனைத்து மசாலாப் பொடிகளையும் தூவிக் கிளற வேண்டும்.
6. பின்பு அதில் வேக வைத்துள்ள வான்கோழிக் கறித்துண்டுகளை நீருடன் ஊற்றிக் கிளறிவிட்டு, மூடி வைத்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
7. கடைசியாக மல்லித்தழையைத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.