கோழிக்கறி வடை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி (எலும்பில்லாதது ) -150 கிராம்
2. சின்ன வெங்காயம் - 50 கிராம்
3. கரம் மசாலாத்தூள் -1 கரண்டி
4. இஞ்சி, பூண்டு விழுது - 1/2 கரண்டி
5. ரொட்டித் தூள் -150 கிராம்
6. முட்டை -1 எண்ணம்
7. உப்பு -தேவையான அளவு
8. எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. பின்பு கோழிக்கறியை மிக்சியில் விழுதாக அரைத்து வைக்கவும்.
3. அரைத்த கோழிக்கறியுடன், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வடையாகத் தட்டியோ அல்லது உருண்டைகளாக உருட்டியோ வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் ஊற்றிக் கொள்ளவும்.
5. பின்பு ஒரு தட்டில் ரொட்டித்தூளைப் பரப்பி வைத்துக் கொள்ளவும்.
6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் உருட்டி வைத்த கோழிக்கறி உருண்டைகளை முட்டையில் இலேசாகத் தோய்த்து, பின்பு அதை ரொட்டித்தூளில் போட்டுப் பிரட்டி எடுத்துப் போட்டு பொரித்து எடுக்கவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.