மக்ரோனி கோழிக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மக்ரோனி - 200 கிராம்
2. கோழிக்கறி - 250 கிராம்
3. வெங்காயம் - 4 எண்ணம்
4. தக்காளி - 4 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
6. இஞ்சி, பூண்டு விழுது - 5 தேக்கரண்டி
7. மிளகு, சீரகப் பொடி - 2 தேக்கரண்டி
8. மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
9. மல்லித்தழை - சிறிது
10. மசாலாப் பொடி - 3 தேக்கரண்டி
11. எண்ணெய் - 200 மி.லி
12. தேங்காய் - 1/2 மூடி
13. வினிகர் - 4 தேக்கரண்டி
14. உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் மக்ரோனைப் போட்டு, வெந்தவுடன் வடித்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
2. தேங்காயைத் துருவி அரைத்துக் கொள்ளவும்.
3. வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவைகளை நறுக்கிக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவைகளைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
5. பிறகு, அதிலேயே இஞ்சி பூண்டு விழுது, வினிகர் மற்றும் கோழிக்கறியைச் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடாமல் ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
6. பின்பு மசாலாத்தூள், மிளகு, சீரகத்தூள், மல்லித்தூள், அரைத்த தேங்காய் விழுது ஆகியவற்றைத் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
7. மல்லித்தழையைத் தூவி பாத்திரத்தை மூடி போட்டு வேகவிடவும்.
8. குருமா வெந்தவுடன், அதனுடன் வெந்த மக்ரோனையும் சேர்த்துக் கிளறி அடுப்பில் குறைந்த நெருப்பில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.