சிக்கன் சாப்ஸ்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழி — 1 கிலோ
2. இஞ்சி — 1 அங்குலம்
3. பச்சைமிளகாய் — 10 எண்ணம்
4. பெரிய வெங்காயம் — 1 எண்ணம்
5. முட்டை — 3 எண்ணம்
6. உப்பு — தேவையான அளவு
7. எண்ணைய் — தேவையான அளவு.
செய்முறை:
1. இஞ்சி, பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் மூன்றையும் நன்கு அரைக்கவும்.
2. இந்த மசாலாவுடன் உப்பு சேர்த்து கோழித்துண்டுகளுடன் சேர்த்து பிசறி அரை மணி நேரம் வரை வைக்கவும்.
3. அந்தக் கறி மசாலாவை ஒரு தனி பாத்திரத்தில் போட்டு, அதைக் குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.
4. கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தைத் தனியே எடுத்துக் கறியை ஆற வைக்கவும்.
5. முட்டையுடன் உப்பு சேர்த்து நன்றாக நுரை வர அடிக்கவும்.
6. வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும், கோழித்துண்டுகளை முட்டையில் முக்கி வாணலியில் காய்ந்த எண்ணையில் போட்டுப் பொரிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.