கோழிக்கறி வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 1 கிலோ
2. வெங்காயம் - 500 கிராம்
3. தக்காளி - 500 கிராம்
4. கேரட் - 200 கிராம்
5. பச்சைப் பட்டாணி - 100 கிராம்
6. உருளைக் கிழங்கு - 300 கிராம்
7. எலுமிச்சை - 1 எண்ணம்
8. மிளகுத்தூள் - 50 கிராம்
9. பூண்டு - 75 கிராம்
10. உப்பு - தேவையான அளவு
11. நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1.கோழிக்கறியை தூண்டுகளாக்கிக் கழுவி வைக்கவும்.
2. மிளகுத்தூள், பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்து கறியில் பிசைந்து வைக்கவும். எலிமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறைக் கறியில் ஊற்றி வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக் கிழங்கு ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் வெங்காயம் மற்றும் உள்ள காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.
5. மசாலா தடவி ஊற வைத்த கோழிக்கறியை எண்ணெய்யில் வறுத்தெடுக்கவும்.
6. வறுத்த கறியை வதக்கிய காய்கறிகளுடன் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்த பின்பு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.