வாத்துக்கறிக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வாத்துக் கறி - 1 கிலோ
2. வெங்காயம் - 100 கிராம்
3. புளி- 100 கிராம்
4. பச்சை மிளகாய்- 6 எண்ணம்
5. பூண்டு- 15 பல்
6. பட்டை- 1 துண்டு
7. கிராம்பு- 5 எண்ணம்
8. இலை - சிறிது
9. மிளகு- 2 தேக்கரண்டி
10. தேங்காய்- 1 முடி
11. சீரகம்- 1 தேக்கரண்டி
12. எண்ணைய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. புளியைக் கரைத்து அதில் உறித்த பூண்டு, இலை, பட்டை, கிராம்பு, வாத்துக் கறி சேர்த்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
2. வெங்காயத்தை நறுக்கியும், தேங்காயைத் துருவியும் வைக்கவும்.
3. பச்சை மிளகாய், மிளகு சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் வதங்கியதும், அதில் அரைத்த மிளகாய், மிளகு விழுது சேர்த்து வதக்கவும்.
6. பச்சை வாசனை போனதும், வாத்துக்கறியுடனான புளிக்கரைசல் தண்ணீரை ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
7. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து வறுக்கவும்.
8. வதக்கிய தேங்காய்த் துருவலுடன் சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
9. வெந்து கொண்டிருக்கும் குழம்பு நன்றாகக் கொதித்து வரும் போது, அரைத்த விழுதினை ஊற்றிச் சிறிது கெட்டியானதும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.