நாட்டுக்கோழிக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நாட்டுக்கோழி - 1 கிலோ
2. சின்ன வெங்காயம் – 100 கிராம்
3. தக்காளி – 3 எண்ணம்
4. தேங்காய்ப் பால் - 1 கப்
5. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
6. மசாலாத் தூள் – 3 மேசைக்கரண்டி
7. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
8. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
9. சோம்பு - 1 தேக்கரண்டி
10. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
11. கறிவேப்பிலை - 1கொத்து
12. மல்லித்தழை – சிறிது
13. நல்ல எண்ணெய் – தேவையான அளவு
14. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. கோழிக்கறித் துண்டுகளைச் சுத்தம் செய்து வைக்க்கவும்.
2. சின்ன வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
4. அத்துடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. வதக்கியவற்றை ஆற வைத்து மசாலாவாக விழுது போல் அரைக்கவும்.
6. நாட்டுக்கோழியை நன்றாகக் கழுவிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
7. ஒரு பாத்திரத்தில் / குக்கரில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
8. அதில் தக்காளி சேர்த்துக் குழைய வதக்கவும். மஞ்சள் தூள், மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும்.
9. அத்துடன் நறுக்கி வைத்த கோழித்துண்டுகள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
10. பின்னர் அதில் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து கிளறவும்.
11. அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.