சிக்கன் வறுவல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் - 1/2 கிலோ
2. தயிர் - 1 கப்
3. சோள மாவு - 5 ஸ்பூன்
4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 3/4 தேக்கரண்டி
6. மிளகு தூள் - 3/4 தேக்கரண்டி
7. முட்டை - 1 எண்ணம்
8. எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
9. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு
12. கேசரி கலர் - சிறிது.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனைப் போட்டு, அத்துடன் தயிர், சோள மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், கேசரி கலர், எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டிக கொள்ள வேண்டும்.
2. அந்த கலவையில் தண்ணீர் அதிகம் இருந்தால், குறைப்பதற்குத் தேவையான சோளமாவு சேர்த்துக் கொள்ளவும்.
3. பின் அந்தக் கலவையை க் குறைந்தது இரண்டு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள சிக்கனைப் போட்டு மிதமான நெருப்பில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.