பஞ்சாபி சிக்கன்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் - 1/2 கிலோ
2. மிளகு - 10 எண்ணம்
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. கடுகு - 1 தேக்கரண்டி
5. பட்டை - சிறிது
6. கிராம்பு - 5 எண்ணம்
7. மல்லி - 1 மேசைக்கரண்டி
8. வெங்காயம் - 2 எண்ணம்
9. பூண்டு - 5 பற்கள்
10. வினிகர் - 2 மேசைக்கரண்டி
11. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. ஒரு வாணலியில் மல்லி, சீரகம், கடுகு, மிளகு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை போட்டு வாசனை வரும் வரை வறுத்து, பின் அதனை இறக்கி ஆற வைக்கவும்.
2. ஆறிய பின்பு அதை பொடி செய்து வைக்கவும்
3. சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை அரைத்து வைத்துள்ள பொடியில் ஒரு டீஸ்பூன் தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளதை சேர்த்து உப்பு சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தனியாக எடுத்த வைத்த பொடி, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
5. பிறகு அதில் மிளகாய்த்தூள் சேர்த்துப் பிரட்டவும்.
6. பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து தீயைக் குறைவில் வைத்து 10 நிமிடம் வதக்கவும்.
7. அடுத்து அதில் சிறிது வினிகரைத் தூவிப் பிரட்டி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.