ஆந்திரா சிக்கன் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் – 1/4 கிலோ
2. வெங்கயம் – 2 எண்ணம்
3. மிளகாய் வற்றல் – 5 எண்ணம்
4. புளி – நெல்லிக்காய் அளவு
5. இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
7. சோம்பு – 1/2 தேக்கரண்டி
8. கறிவேபில்லை – சிறிது
9. உப்பு – தேவையான அளவு
10. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. புளியைச் சிறிது தண்ணீரில் ஊற வைத்துக் கரைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு, கறிவேபில்லை, மிளகாய்வற்றல் போட்டுத் தாளிக்கவும்.
3. பிறகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, மல்லித்தழை, சிக்கன், மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து சிக்கனை வேகவிடவும்.
4. கறி நன்கு வெந்தவுடன் புளி கரைசல் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.