கோழிக்கறிக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 500 கிராம்
2. பல்லாரி - 2 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. கரம் மசாலாத்தூள் - 1 கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1 கரண்டி
6. இஞ்சி பூண்டு விழுது - 2 கரண்டி
7. வறுகடலை (பொட்டுக்கடலை) - சிறிது
8. தேங்காய்த் துருவல் - 1/4 கப்
9. முந்திரிப்பருப்பு - 15 எண்ணம்
10. பட்டை - 1 துண்டு
11. கிராம்பு -3 எண்ணம்
12. ஏலக்காய் - 2 எண்ணம்
13. மல்லித்தழை - சிறிது
14. எண்ணெய் - தேவையான அளவு
15. உப்பு - தேவையான அளவு .
செய்முறை:
1. கோழிக்கறியை நன்றாகச் சுத்தம் செய்து, அதில் உப்பு, கரம்மசாலாப்பொடி, இஞ்சி பூண்டு விழுது போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அதில் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வதக்கவும்.
3. அதில் நீளவாக்கில் நறுக்கிய பல்லாரி, தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தழை போட்டு நன்றாக வதக்கவும்.
4. பின்னர் அதில் ஊற வைத்த கோழிக்கறியைப் போட்டு கிளறி விடவும்.
5. கறி வெந்ததும், தேங்காய்த்துருவல், வறுகடலை, முந்திரி விழுதாக அரைத்து ஊற்றவும்.
6. கடைசியாக மல்லித்தழையை மேலாகத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.