சிக்கன் மஞ்சூரியன்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 500 கிராம் (எலும்பு நீக்கியது)
மேல் மாவுக்கு
1. மைதா மாவு - 125 கிராம்
2. கார்ன்ப்ளவர் - 50 கிராம்
3. பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
4. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
5. முட்டை - 1 எண்ணம்
6. உப்பு - தேவையான அளவு
பிற தேவைகள்
1. நல்லெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
2. வெங்காயம் - 50 கிராம்
3. மிளகாய் - 75 கிராம்
4. இஞ்சி - 50 கிராம்
5. பூண்டு - 50 கிராம்
6. குடை மிளகாய் - 25 கிராம்
7. சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
8. வினிகர் - 1/2 தேக்கரண்டி
9. அஜினோமோட்டா - 1 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.மைதா, பேக்கிங் பவுடர், மிளகுத் தூள், கார்ன்ப்ளவர், முட்டை ஆகியவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
2. சுத்தம் செய்த கறித்துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய்யில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
3. ஒரு வாணலியில் 2 மேஜைக் கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பொடியாக வெட்டிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, குடை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
4. அத்துடன் சோயா சாஸ், வினிகர், அஜினோமோட்டா சால்ட், உப்பு, கார்ன்பிளவர் கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
5. எல்லாம் சேர்ந்து கெட்டியாக வந்தபின் தனியாகப் பொறித்து வைத்திருக்கும் கறித் துண்டுகளை அதனுடன் சேர்த்து உபயோகிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.