சிக்கன் விந்தாரி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 1 கிலோ
2. பெல்லாரி வெங்காயம் - 100 கிராம்
3. நல்லெண்ணெய் - 100 மி.லி
4. தேங்காய் - 1.2 மூடி
5. கசகசா - 2 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல்- 15 எண்ணம்
7. மல்லி - 2 தேக்கரண்டி
8. சீரகம் - சிறிது
9. கடுகு - 2 தேக்கரண்டி
10. பூண்டி - 1
11. இஞ்சி - சிறிது
செய்முறை:
1.வற்றல், மல்லி, சீரகம், கடுகு, கசகசா ஆகியவற்றை வறுத்து அரைக்கவும்.
2. இஞ்சி, பூண்டு தனியாகவும், தேங்காய் தனியாகவும் அரைக்கவும்.
3. நீளமாக வெடிய வெங்காயத்தை வதக்கி அரைத்த இஞ்சி, பூண்டு போட்டு அரைத்த மசாலாவையும் போட்டு வாசனை வரும் வரை வதக்கி 200 மி.லி. தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
4. பின்னர், கோழித்துண்டுகளைத் தேவையான உப்பு, மஞ்சள் சேர்த்து வேக விடவும்.
5. பாதி வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டுக் கொதிக்க விடவும்.
6. குழம்பு வற்றிச் சிவந்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.