ஜிஞ்சர் சிக்கன் கிரேவி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கோழி – 1/2 கிலோ
2. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
3. இஞ்சி – 2 துண்டு
4. பூண்டு – 7 பல்
5. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
6. உப்பு – தேவையான அளவு
7. பட்டை – 1 எண்ணம்
8. இலவங்கம் – சிறிதளவு
9. கறிவேப்பிலை – சிறிதளவு
10. கிராம்பு – 2 எண்ணம்
11. பிரியாணி இலை – 2 எண்ணம்
12. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் சிக்கனைச் சுத்தமாகக் கழுவித் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
2. பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
3. பட்டை, லவங்கம், கிராம்பு, இலை இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. அதன் பிறகு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் சிக்கனைப் போட்டு நன்றாகக் கிளறி வைத்துக் கொண்டு, அதில் அரைத்து வைத்துள்ள பொடியையும் போட்டுக் குக்கரில் இரண்டு விசில் வரும்வரை மூடி வைக்கவும்.
5. பின்பு சிறிது எண்ணெய் ஊற்றிப் பொன்னிறமாக வரும் வரைக் கிளறவும்.
6. கடைசியில் கறிவேப்பிலையைப் போட்டு இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.