மிளகு சிக்கன் மசாலா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் - 1 கிலோ
2. பட்டை - 1 துண்டு
3. ஏலக்காய் - 3 எண்ணம்
4. கிராம்பு - 5 எண்ணம்
5. வெங்காயம் - 4 எண்ணம்
6. தட்டிய இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி
7. தக்காளி - 3 எண்ணம்
8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
9. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
10. கறிவேப்பில்லை - சிறிது
மசாலா அரைக்க:
11. மல்லி (தனியா) - 2 மேசைக்கரண்டி
12. சீரகம் - 1 தேக்கரண்டி
13. சோம்பு - 1 தேக்கரண்டி
14. மிளகு - 3 மேசைக்கரண்டி
15. காய்ந்த மிளகாய் - 4 எண்ணம்
16. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் இன்றி, மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து மூன்று நிமிடம் வறுக்கவும்.
2. வறுத்த மசாலாவை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
3. அகலக் கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும், அதில் தட்டிய இஞ்சிப் பூண்டு சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி பாதி வதங்கியதும், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிக்கன் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.
7. ஐந்து நிமிடம் கிளறிய பின், அதில் தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
8. அடுத்து அரைத்த மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும்.
9. ஈரம் வற்றிய பின்பு, அதில் கறிவேப்பில்லை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
10. மிளகு சிக்கன் மசாலாவை இறக்கிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.