கோழிப் பிரியாணி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 800 கிராம்
2. பாசுமதி அரிசி - 300 கிராம்
3. நெய் - 120 கிராம்
4. கரம் மசாலா - 10 கிராம்
5. வெங்காயம் - 150 கிராம்
6. இஞ்சி - 50 கிராம்
7. பூண்டு - 50 கிராம்
8. தயிர் - 150 மி.லி
9. எலுமிச்சம் பழம் - 1 எண்ணம்
10. புதினா - 25 கிராம்
11. கறிவேப்பிலை - 25 கிராம்
12. உப்பு - தேவையான அளவு
13. மிளகாய்த்தூள் - சிறிது
செய்முறை:
1.ஒரு வாணலியில் நெய்யைச் சூடாக்கி அதில் கரம் மசாலாவைப் போட்டு சிவக்க வதக்கவும்.
2. அதில் இஞ்சிப் பூண்டு மசியல், உப்பு, மிளகாய்த்தூள் கலக்கவும்.
3. பின்பு அதில் சிறிது நேரம் கோழிக்கறியைப் போட்டு வேக வைக்கவும். இதில் தயிரைக் கலக்கவும்.
4. அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். கோழிக்கறியை நன்றாக வேகவிடவும்.
5. எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து வேக விடவும்.
6. தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து பாசுமதி அரிசியைக் கழுவிப் போட்டு வேகவிடவும்.
7. வெந்த பின்பு தண்ணீரை வடிகட்டவும். கோழிக்கலவையை இதனுடன் கலந்து வெங்காயம், புதினா, கருவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
8. பாத்திரத்தைக் கனமான துணியால் மூடி 20 நிமிடங்கள் இதமான சூட்டில் வேகவிடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.