சிக்கன் சுக்கா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் – 1/2 கிலோ
2. வெங்காயம் – 3 எண்ணம்
3. இஞ்சிப் பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
4. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
5. கரம் மசாலாத் தூள் – 1 மேசைக்கரண்டி
6. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
7. மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
8. சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
9. மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி
10. எண்ணெய் – தேவையான அளவு
11. உப்பு – தேவையான அளவு
12. மல்லித்தழை – கைப்பிடியளவு
13. கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
1. சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. வாணலியில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
3. அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சிப் பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. நன்றாக வதங்கிய பிறகு, அதில் சிக்கன் சேர்த்து நன்கு கிளறவும்.
5. பின்பு அதனுடன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
6. அதன் பின்னர், அதனை மூடி போட்டு குறைவான தீயில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
7. சிக்கன் வெந்ததும், கடைசியாக மல்லித்தழையைத் தூவி இறக்கிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.