சில்லி சிக்கன் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் – ½ கிலோ
2. தயிர் – ½ கப்
3. பூண்டு – 6 பல்
4. குடைமிளகாய் – 2 எண்ணம்
5. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
6. தக்காளி – 1 எண்ணம்
7. வெங்காயம் – 1 எண்ணம்
8. மல்லித்தழை – சிறிது
9. இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
10. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
11. மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி
12. கரம் மசாலாத் தூள் – 1 மேசைக்கரண்டி
13. உப்பு – 1½ தேக்கரண்டி
14. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. சிக்கனை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன், தயிர் அரை தேக்கரண்டி, உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்றாகக் கலந்து பிரிட்ஜில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளி, மல்லித்தழை, குடை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
4. பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
5. பூண்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
7. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
8. அதனுடன் பிரிட்ஜில் ஊற வைத்த சிக்கனைப் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை வதக்கவும்.
9. அடுத்து அதில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
10. தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
11. சிக்கன் பாதியளவு வெந்தவுடன் குடை மிளகாயைச் சேர்க்கவும்.
12. சிக்கன் நன்றாக வெந்தவுடன் குழம்பில் நறுக்கிய பூண்டு, கரம் மசாலாத் தூள் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
13. கடைசியாக, மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.