முந்திரிப்பருப்பு சிக்கன்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் -1 /2 கிலோ
2. சின்ன வெங்காயம் - 150 கிராம்
3. பச்சை மிளகாய் - 7 எண்ணம்
4. முந்திரிப்பருப்பு - 15 எண்ணம்
5. இஞ்சி - சிறிய துண்டு
6. பூண்டு - 16 பல்
7. சீரகம் -1 /2 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
9. மல்லித்தூள் -1 தேக்கரண்டி
10. மிளகுப்பொடி -1 தேக்கரண்டி
11. சீரகத்தூள் -1 தேக்கரண்டி
12. மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
13. தயிர் - 2 தேக்கரண்டி
14. எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
15. எண்ணெய் - தேவையான அளவு
16. கறிவேப்பிலை - சிறிது
17. மல்லித்தழை - சிறிது
18. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயத்தைச் சிறியதாக நறுக்கி வைக்கவும்.
2. சீரகத்துடன் சிறிது வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக விழுது போல் அரைக்கவும்.
3. இஞ்சியுடன் எட்டு பூண்டு பற்களைச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
4. முந்திரிப்பருப்பை இலேசாக வறுத்துத் தனியாக வைக்கவும்.
5. சிக்கனை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
6. அதனுடன் தயிர், எலுமிச்சை, உப்பு, எண்ணெய் 2 தேக்கரண்டி, மீதம் வைத்திருக்கும் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வறுத்த முந்திரி போட்டு நன்கு பிசைந்து அப்படியே குளிர் பதனப்பெட்டியில் சுமார் ஒரு மணி நேரம் வரை வைத்து விடவும்.
7. அடுப்பில் கடாயை வைத்து, அதில் மசாலா புரட்டிய சிக்கனைப் போட்டு தீயைச் சிறிதாக குறைத்து வேகவிடவும்.
8. குறைந்தது 15 நிமிடம் அடுப்பில் வைத்து சிக்கன் நன்கு வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.