சிக்கன் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் - 1/2 கிலோ
2. நல்லெண்ணெய் - 200 மி.லி.
3. உப்பு - தேவையான அளவு
4. சின்ன வெங்காயம் - 20 எண்ணம்
5. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
6. தக்காளி - 2 எண்ணம்
7. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
9. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
10. சீரகம் -1 தேக்கரண்டி
11. சோம்பு -1 தேக்கரண்டி
12. தேங்காய் துருவல் - 1 கப்
13. கசகசா - 1 தேக்கரண்டி
14. பட்டை - சிறிது
15. கிராம்பு - 4 எண்ணம்
16. கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. சிக்கன் கழுவி சுத்தம் செய்து வைக்கவும், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பட்டை, கிராம்பு, கசகசா, சீரகம், சோம்பு ஆகியவற்றை போட்டு வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
3. ஆறிய பிறகு, அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துத் தனியாக வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கருவேப்பிலை, கடுகு போட்டுத் தாளிக்கவும்.
5. நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
6. இதனுடன் சிக்கனைச் சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் தூவி நன்றாகப் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
7. தக்காளியைச் சேர்த்து, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவைக் கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
8. சிக்கன் மற்றும் அனைத்து பொருட்களும் வேகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.சிக்கன் வெந்தவுடன் கீழேஇறக்கி வேறுபாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.