மிளகாய் கோழி வறுவல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 1/2 கிலோ
2. மிளகாய் வற்றல் - 13 எண்ணம்
3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
4. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
6. இஞ்சி (பொடியாக நறுக்கியது) - சிறிது
7. பூண்டு - 5 பல்
8. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
9. தக்காளி - 2 எண்ணம்
10. உப்பு - தேவையான அளவு
11. கறிவேப்பிலை- சிறிது
செய்முறை:
1. கோழிக்கறியைச் சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமாகக் கழுவவும்.
2. சுத்தம் செய்த கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசறி வைக்கவும்.
3. மிளகாய் வற்றல், தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மிளகாய் வற்றல் சேர்த்து, அதன் விதைகள் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
5. நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
6. மிளகாய் வற்றல், தக்காளி இரண்டும் தன் தோல் தனித்து வரும்வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.
7. அதனுடன் உப்பு, மஞ்சள் சேர்த்த கோழிக்கறியைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
8. மிளகாத்தூள், மல்லித்தூள், ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கறியை மென்மையாக வேக விடவும்.
9. பிறகு நீர் வற்றி வரும் வரை வறுத்து, மேலே சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.