மிளகாய் கோழி வறுவல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி – 1 கிலோ
2. மிளகாய்த்தூள் – 2 கரண்டி
3. மல்லித்தூள் – 2 கரண்டி
4. சிக்கன் மசாலா -2 கரண்டி
5. மிளகுத்தூள் – 1 கரண்டி
6. மஞ்சள்தூள் – 1/4 கரண்டி
7. பூண்டு – 15 பல்
8. தக்காளி – 4 எண்ணம்
9. பெரிய வெங்காயம் - 200 கிராம்
10. இஞ்சி - சிறுதுண்டு
11. மல்லித் தழை - சிறிதளவு
12. நல்லெண்ணெய் - 1/ கப்
13. பட்டை – சிறு துண்டு
14. சோம்பு – சிறிதளவு
15. உப்பு தேவையான அளவு
16. ஏலக்காய் – 2 எண்ணம்
செய்முறை:
1. கோழியைச் சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. இஞ்சிப் பூண்டினைத் தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு கடாயி்ல் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கிராம்பு, பட்டை, , சோம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
5. அதனுடன் அரைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
6. நன்கு வதங்கியவுடன் மசாலாத் தூள் அனைத்தையும் போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
7. அதனுடன் சிக்கன், உப்பு சேர்த்து நன்கு கிளறி மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு மிதமான நெருப்பில் நன்கு வேகவிடவும்.
8. கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி, மல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.