செட்டிநாடு கோழிக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 3/4 கிலோ
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3 தக்காளி - 2 எண்ணம்
4. மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
6. மல்லித்தழை - சிறிதளவு
வறுத்து அரைக்க
7. சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கோப்பை
8. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
9. சீரகம் - 2 தேக்கரண்டி
10. பட்டை - சிறிது
11. கிராம்பு - 3 எண்ணம்
12. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
13. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
14. தேங்காய்த் துருவல் - 1/4 கோப்பை
15. கறிவேப்பிலை - சிறிது
16. இஞ்சி (சிறியது) - 3 துண்டுகள்
17. பூண்டு - 10 பல்
18. மிளகு - 2 தேக்கரண்டி
19. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
20. நல்லெண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க
21. எண்ணெய் - தேவையான அளவு
22. நெய் - 1 தேக்கரண்டி
23. சீரகம் - 1தேக்கரண்டி
24. வெந்தயம் - 1 தேக்கரண்டி
25. பிரிஞ்சி இலை - 1 எண்ணம்
செய்முறை:
1. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வறுக்கக் கொடுத்தவற்றில் பட்டை, கிராம்பு முதலில் போட்டு, அதன் பின்பு சீரகம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
2. அதன் பிறகு, அதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் (நறுக்கியது) சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. பின்னர், தேங்காய்த் துருவல், மிளகு சேர்த்து வதக்கவும்.
5. பின் கறிவேப்பிலை, மல்லித்தூளைச் சேர்த்து நன்கு பிரட்டி வாசம் வர வதக்கி விட்டு இறக்கி ஆற விடவும்.
6. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிக்கக் கொடுத்தவைகளை போட்டுத் தாளிக்கவும்.
7. நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
8. வதங்கியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கி விட்டு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
9. அதன் பிறகு, கழுவி வைத்திருக்கும் கோழிக்கறித் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான நெருப்பில் வேகவிடவும்.
10. கோழி வேகும் நேரத்தில், வறுத்து ஆற வைத்திருப்பதை மின்னரவையில் (மிக்ஸியில்) தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
11. வேகவைத்திருக்கும் கோழியில், அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி, குழம்புக்குத் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி போட்டு ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
12. கடைசியாக, அதில் நறுக்கிய மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.