நாட்டுக்கோழி ரசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நாட்டுக்கோழி - 1 கிலோ
2. தக்காளி - 300 கிராம்
3. சின்ன வெங்காயம் - 200 கிராம்
4. பட்டை - சிறிது
5. சோம்பு - 1/2 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
8. மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
9. மிளகு - 1 தேக்கரண்டி
10. சீரகம் - 2 தேக்கரண்டி
11. பூண்டு - 10 பல்
12. சின்ன வெங்காயம் - 5 எண்ணம்
13. நல்லெண்ணெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. நாட்டுக்கோழியை நடுத்தரமான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
2. தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
3. மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அம்மியில் ஒன்றிரண்டாக நசுக்கி எடுத்து வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு, பட்டை போட்டு தாளித்து, பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் நாட்டுக்கோழியைச் சேர்த்து வதக்கவும்.
6. அதன் பிறகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
7. வதக்கிய பின்பு, தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
8. கறி நன்கு வெந்ததும் நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் போட்டு இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.