மிளகுக் கோழிக்கறி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி – 1 கிலோ
2. நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
3. சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 250 கிராம்
4. இஞ்சிப் பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
6. மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
7. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
8. மிளகுத்தூள் – 1 1/2 தேக்கரண்டி
9. சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
10. உப்பு – தேவையான அளவு
11. கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
1. அகலமான கடாயில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய சிறிய வெங்காயத்தைப் போச்சு நன்றாக வதக்கவும்.
2. வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, இஞ்சிப் பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
3. ஒரு கடாயில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
4. கோழிக்கறித் துண்டுகளை அந்த மசாலாவில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
5. அதன் பிறகு கோழிக்கறித் துண்டுகளுடன் 1 1/2 தேக்கரண்டி உப்பு, 3 தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
6. கடாயில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கோழிக்கறியை 20 நிமிடம் வரை வேக வைக்கவும்.
7. கோழிக்கறி நன்றாக வெந்த பிறகு, சிறிதளவு கருவேப்பிலை சேர்க்கவும்.
8. அடுத்து 1 1/2 தேக்கரண்டி அளவிற்கு மிளகுத்தூளைச் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.