சிக்கன் உப்புக்கறி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 1 கிலோ
2. பெரிய வெங்காயம் - 4 எண்ணம்
3. சிறிய வெங்காயம் - 200 கிராம்
4. வெள்ளைப் பூண்டு - 20 பற்கள்
5. தக்காளி - 2 எண்ணம்
6. மிளகாய் வற்றல் - 16 எண்ணம்
7. மஞ்சள் தூள் - தேவையான அளவு
8. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
9. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1 கோழிக்கறியைத் தோல் நீக்கி, நன்கு கழுவி பிறகு 2 கரண்டி தயிர் ஊற்றி 10 நிமிடம் கழித்து கழுவி எடுத்து வைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சோம்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து, பட்டை, இலை தாளித்து, மிளகாய் வற்றலைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
3. பிறகு வெள்ளைப்பூண்டைப் போட்டு வதக்கி பின் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
4. நன்கு வதங்கியதும், கோழிக் கறியைச் சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், 3 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கோழிக்கறியை வேகவிடவும்.
5. கோழிக்கறி வெந்ததும், உப்பு சேர்ந்த்து போட்டு நன்கு சுருளக் கிண்டவும்.
6. மிளகுத்தூளை வறுத்து நுணுக்கி போட்டுக் கிளறவும்.
7. கடைசியாக, மல்லித்தழை போட்டு இறக்கி வைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.