நாட்டுக்கோழிக் குழம்பு
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. நாட்டுக்கோழி - 1/2 கிலோ
2. சின்ன வெங்காயம் - 150 கிராம்
3. தக்காளி (நறுக்கவும்) - 2 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
8. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
9. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
10. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை - சிறிதளவு
12. உப்பு - தேவையான அளவு
13. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
14. தேங்காய் பால் அல்லது அரைத்த தேங்காய் விழுது - 1/2 கோப்பை
செய்முறை:
1. சின்ன வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
2. குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும், நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. அதில் நறுக்கிய தக்காளி சேர்த்துக் குழைய வதக்கவும்.
5. அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம்மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
6. மசாலா வெந்த வாசனை வந்ததும், அதில் நாட்டுக்கோழித் துண்டுகள் சேர்த்து, தண்ணீர் ஊற்றிக் குக்கரை மூடி 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விடவும்.
7. குக்கர் ஆறியதும், குக்கரைத் திறந்து, தேவையான அளவு தேங்காய் பால் அல்லது அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
குறிப்பு: இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட நாட்டுக்கோழிக் குழம்பு சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.