நண்டு கிரேவி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 5 எண்ணம்
2. தக்காளி - 3 எண்ணம்
3. பல்லாரி வெங்காயம் - 2 எண்ணம்
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. சோம்பு - 1 தேக்கரண்டி
6. மிளகு 1 தேக்கரண்டி
7. பூண்டு - 10 பல்
8. இஞ்சி - சிறிதளவு
9. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
10. மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
13. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. மஞ்சள்தூள் கலந்த நீரில் முப்பது நிமிடங்கள் நண்டுவைப் போட்டு வைத்துப் பின்னர் சுத்தம் செய்யவும்.
2. மிளகாய் வற்றல், சீரகம், மிளகு, சோம்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கறிவேப்பிலை, வெங்காயம் பின்னர் தக்காளி, மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
4. அதனுடன் அரைத்த மிளகு, மிளகாய் விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கித் தேவையான தண்ணீர் விட்டுக் கலக்கவும்.
5. பின்னர் அந்தக் கலவையில் நண்டுகளைப் போட்டு, நன்கு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
6. கொதி வந்தவுடன் உப்பு போட்டு, அடுப்பை மிதமாக எரிய விட்டு கிரேவி பக்குவம் வரும் வரை கிளறவும்.
7. கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.