நண்டு வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 250 கிராம்
2. சின்ன வெங்காயம் - 15 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
5. சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
6. தேங்காயாய் துருவல் - பாதி மூடி
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. நண்டைச் சுத்தமாகக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
2. தேங்காய்த்துருவல், நான்கு சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
3. அதன் பின், ஒரு பாத்திரத்தில், தேங்காய்த் துருவல், சாம்பார் தூள், உப்பு, நண்டு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி வைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
5. பின் அதனுள், நண்டைப் போட்டு வதக்கி எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.