நண்டு பொடிமாஸ்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பெரிய நண்டு - 1/2 கிலோ
2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
3. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
4. தட்டிய பூண்டு - 1 மேசைக்கரண்டி
5. வெங்காயம் - 1 எண்ணம்
6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
8. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
9. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது
11. மல்லித்தழை - சிறிது
12. எலுமிச்சைச் சாறு - சிறிது
13. தேங்காய் துருவல் - 2 கரண்டி
செய்முறை:
1. நண்டை சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு, சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
2. வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. அதில் மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
5. நன்கு மசாலா வாடை போகுமாறு கலக்கி விடவும்.
6. அடுத்து, அதில் வேக வைத்து உதிர்த்த நண்டு சதை, தேவைக்கு உப்பு போட்டு நன்றாகப் பிரட்டி ஐந்து நிமிடம் வேக விடவும். கலக்கும் போதே உதிர்ந்து விடும்.
7. கடைசியாக, கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கி இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.