கார நண்டுக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 500 கிராம்
2. பெரிய வெங்காயம் - 100 கிராம்
3. சிறிய வெங்காயம் - 5 எண்ணம்
4. தக்காளி - 100 கிராம்
5. மிளகாய் - 3 எண்ணம்
6. பூண்டு - 5 பல்
7. புளி - 25 கிராம்
8. இஞ்சி - சிறிது
9. மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
10. மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
11. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
12. சோம்பு - 1 தேக்கரண்டி
13. சீரகம் - 1 தேக்கரண்டி
14. மிளகு - 1 தேக்கரண்டி
15. தேங்காய் - 1 மூடி
16. நல்லெண்ணெய் - 50 மி.லி
17. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
1. பட்டை - சிறிது
2. கிராம்பு - சிறிது
3. பிரிஞ்சி இலை - சிறிது
4. கடுகு, உளுந்து, வெந்தயம் - 1 தேக்கரண்டி.
செய்முறை:
1. நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வைக்கவும்.
2. தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் சிறிய வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
3. கனமான பாத்திரத்தில் தாளிக்க வேண்டிய பொருட்கள் சேர்த்துத் தாளித்து அதில் வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.
4. அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை எடுத்துச் சேர்த்துக் கிளறவும். பின்பு அதில் 300 மி.லி. தண்ணீரில் ஊற வைத்த புளிக்கரைசலை ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்துக் கிளறி விடவும்.
5. இதில் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நண்டு நன்றாக வெந்தவுடன் இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.