நண்டு வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 7 எண்ணம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி
6. கறிவேப்பிலை - சிறிது
7. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
அரைக்க
1. தேங்காய்த்துருவல் - 50 கிராம்
2. சோம்பு -1 தேக்கரண்டி
3. கசகசா - 1 தேக்கரண்டி
4. கரம்மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் -7 எண்ணம்
செய்முறை:
1. நண்டை இலேசான சுடுநீரில் மஞ்சள்தூள் கலந்து சிறிது நேரம் ஊறவைத்துச் சுத்தம் செய்யவும்.
2. மிளகாயைச் சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.
3. தேங்காய்த் துருவல், சோம்பு, கசகசா, கரம்மசாலா இவற்றையும் சேர்த்து மசாலாவை விழுதாக அரைக்கவும்.
4. வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் விட்டுக் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அதில் நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
6. இஞ்சிப் பூண்டு விழுது, மிளகாய் வற்றல் விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
7. மஞ்சள்தூள், உப்பு, நண்டு சேர்த்து வதக்கித் தேவையானளவு நீர் சேர்த்து வேகவிடவும்.
8. நண்டு வெந்ததும், அதில் தேங்காய் மசாலா சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.