நண்டு பொரியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பெரிய நண்டு – 5 எண்ணம்
2. மிளகாய் வற்றல் – 8 எண்ணம்
3. சீரகம் – 1 தேக்கரண்டி
4. வெங்காயம் – 6 எண்ணம்
5. மல்லி – 2 தேக்கரண்டி
6. கடுகு – 1 தேக்கரண்டி
7. தேங்காய்த் துருவல் சில் – 4 தேக்கரண்டி
8. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. நண்டுகளைத் துண்டுகளாக்கி மஞ்சள் கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்துப் பின்னர் கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. மிளகாய் வற்றல், மல்லி, சீரகம், கடுகு, நறுக்கிய வெங்காயம், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள் தூள், அரைத்து வைத்திருக்கும் விழுது ஆகியவற்றைப் போட்டு பிரட்டி ஊற வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஊற வைத்திருக்கும் நண்டைப் போட்டு சிவக்கப் பொரித்தெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.